தென் தேசத்து ராஜஸ்திரீ THE QUEEN OF THE SOUTH கேடில் கூடாரம், இந்தியானாபோலிஸ், இந்தியானா, அமெரிக்கா. 57-06-14 1. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. (சகோதரன், "அடுத்த வருடம் எங்களோடு சட்டனூகாவுக்கு உம்மை வரவேற்கிறோம்" என்கிறார் - ஆசிரியர்.) உமக்கு நன்றி. கர்த்தருக்குச் சித்தமானால், நான் அங்கு இருப்பேன். உமக்கு நன்றி. உட்காரலாம். (ஒலிநாடாவில் காலியிடம்-ஆசிரியர்)... இன்றிரவு இங்கே இருப்பதும், இந்த அற்புதமான உணர்வையும், ஜனங்களுடைய ஏற்புத்தன்மையைக் (response) கொண்டு இருப்பதும் ஒரு சிலாக்கியமாயுள்ளது, மேலும்.... இந்தச் சகோதரர்களும் நீங்களும் கூட, அடுத்த வருட கன்வென்சன் கூட்டத்திற்கு என்னை மீண்டும் வரும்படி அழைப்பது அருமையாக இருக்கிறது. இந்த வேறொரு வருடம் முழுவதும் பரலோகப் பிதாவானவர் நம்மைக் கண்ணோக்கி, நமது பிரயாசத்தின் நிமித்தமாக அநேக ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை நமக்குத் தர தென் தேசத்து ராஜஸ்திரீ வேண்டுமென்று ஜெபிக்கிறேன். நாமெல்லாரும் ஆரோக்கியத்தோடும், சந்தோஷத்தோடும், தேவனைத் துதித்துக் கொண்டே மறுபடியும் அடுத்த வருடம் சட்டனூகாவில் ஒருமித்து சந்திப்போம். 2. இது எனக்கு மேலான ஒரு வாரமாக இருந்து வருகிறது. எனக்கு ஜனங்களோடு கூட அநேக தனிப்பட்ட பேட்டிகள் இருந்தது, ஒரு வழக்கமான கூட்டத்தில், அது எப்போதாவது தான் நடக்கும், ஆனால் இந்த கன்வென்சன் கூட்டத்தில், அது எனக்காக ஒதுக்கப்பட்டு, அதைச் செய்தேன். அந்த அறைக்குள் பரிசுத்த ஆவியானவர் அசைவாடி, அவர் செய்த கிரியைகளைப் பார்க்கும் போது. சற்று முன்பு தான், அவசரகால அறையை (room of the emergency) விட்டு வெளியேறினேன். அங்கே அதனுள்ளே, குருடர்கள், செவிடர்கள், ஊனமுற்றவர்களினூடாகப் போய், அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், மிகவும் துயரப்பட்டேன். ஊன்று கோலில் இருந்த ஒரு மனிதர், நான் அங்கிருந்து புறப்பட்ட போது, அவருடைய ஊன்றுகோல் இல்லாமலேயே தரையில் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தார். 3. ஒரு சிறு பையன் தசைப்பற்றுகளைப் பாதிக்கிற ஏதோவொன்றைக் கொண்டிருந்தவனாக, கனடாவிலிருந்து வந்து, உள்ளே உட்கார்ந்து கொண்டிருந்தான். அது எப்படி அழைக்கப்பட்டது என்று மறந்துவிட்டேன். அவன், "இதோ பாருங்கள், என்னால் எனது கரத்தை மேலே உயர்த்த முடிகிறது" என்று கூறினான். அவனுடைய தகப்பனாரும் அவர்களும் அழுதார்கள். செவி கேட்க முடியாமல், காது கேட்க முடியாமல், அங்கே உட்கார்ந்திருந்த ஒரு செவிடான மனிதரைப் பார்க்கும் போது. மேலும் வித்தியாசமானவர்கள்... பிறவியிலேயே முடமாயிருந்த ஒரு சிறுமி உட்கார்ந்திருந்து, தன்னுடைய தாயாரின் கரங்களில் எழுந்து நின்ற போது, அவர்கள் எல்லாம் அப்படியே களிகூர்ந்தார்கள். அது நம்முடைய அன்புள்ள கர்த்தராகிய இயேசுவின் இரக்கத்தைத் தான் நிரூபிக்கிறது. இன்றிரவில், நம்மோடு கிறிஸ்தவ வியாபார புருஷரையும் (Christian business man) கூட உடையவனாய் இருக்கிறேன். எனது நல்நண்பராகிய சகோதரன் டீமாஸ் சகரியானும், மற்ற அநேகரும். நாங்கள் காலையில், வாஷிங்டன் ஓட்டலில் பேச வேண்டியுள்ளது, காலையில் அது அறிவிப்பு செய்யப்பட்டுவிட்டது என்று யூகிக்கிறேன். 4. உங்கள் ஜெபங்களுக்காகவும் உங்கள் ஒத்துழைப்புக்காகவும் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த ஆராதனை தொடரும்போது, தேவனுடைய ஆசீர்வாதங்களும் தொடர்ந்து வரவேண்டுமென்று இப்பொழுது நான் ஜெபிக்கிறேன். மேலும் எனக்காக ஜெபிக்க மறக்க வேண்டாம். ஜெபம் அவசியமாயுள்ள ஒருவன் நான். இப்பொழுது, தென்தேசத்து ராஜஸ்திரீ அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையை நாம் திறப்பதற்கு முன்பாக, ஒரு கணம் அப்படியே நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 5. எங்கள் ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, இந்தப் பெரும் எண்ணிக்கையில், நாங்கள் இங்கே ஒன்று கூடும்படியாக எங்களை அனுமதிக்க நீர் எங்களுக்கு மிகவும் இரக்கமாயிருந்திருக்கிறீர் என்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். புயல் இருந்தபோதிலும், இன்னுமாக ஜனங்கள் வருகிறார்கள். இவர்களுக்காக நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். இவர்கள் ஒரு போதும் காணப்படும்படியாக, இதைப்போன்ற ஒரு இரவில் வந்திருக்கமாட்டார்கள். ஆனால் உம்மிடத்திலிருந்து இவர்களால் என்ன நன்மையைப் பெற்றுக் கொள்ள முடியுமோ, அதற்காகவே இவர்கள் வருகிறார்கள். நாங்கள் பாடலிலும், வார்த்தையிலும், ஜெபத்திலும் இவர்களுக்கு ஊழியம் செய்கையில், உமது பரிசுத்த ஆவியானவர் தாமே இன்றிரவு எங்கள் மத்தியில் கிரியை செய்து, மிக அதிகமாகவும் அபரிமிதமாகவும் எங்களுக்குத் தந்தருளுவாராக. உமது வார்த்தையை ஆசீர்வதித்தருளும். உமது வார்த்தையே சாத்தியம். பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தையைக் குறித்துள்ள அடுத்த சில கண நேரங்களை எடுத்துக் கொண்டு, மிகவுமாக எல்லா நம்பிக்கையும் இழந்து தேவையில் இருக்கிறவர்களின் இருதயத்திற்குள் அதை வைப்பாராக. நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 6. தாமதமாகி விட்டது, இன்றிரவு ஆராதனைக்குப் பிறகு, ஜெபிக்கப்படுவதற்காக, பல நூறு பேர் எனக்கிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் முதலாவது காரியமாகிய இரட்சிப்பு தான் முதலாவதாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், இன்றிரவில் வார்த்தையின் வாசிப்பிற்காக, பரிசுத்த மத்தேயுவின் சுவிசேஷம், 12-வது அதிகாரம், 42-வது வசனத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். நான் கொஞ்ச நேரமே அன்றி, அதற்கு அதிக நேரம் பேச முயற்சிக்க மாட்டேன், எனவே கவனமாகச் செவிகொடுங்கள். தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததி யாரோடெழுந்து நின்று இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள். (மத்தேயு 12:42) 7. நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட ஆண்டவர் தம்மைக் குற்றம் கண்டுபிடிப்பவர்களில் சிலரை அப்பொழுது தான் சந்தித்திருந்தார். அவர் உரிமை கோரினவைகளை (claims) அவர்கள் கேள்விப்பட்டபோது, அது பலவகைப்பட்ட ஜனக்கூட்டத்தை உண்டு பண்ணி விடுகிறது. அது எப்போதுமே அவ்வாறு தான் இருந்திருக்கிறது, மேலும் அது எப்போதுமே அவ்வாறு தான் இருக்கும். சுவிசேஷமானது எங்கே அறிவிக்கப்பட்டு இயற்கைக்கு மேம்பட்டவைகள் செய்யப்படுகிறதோ, அங்கே குறிப்பாக, பலவகைப்பட்ட ஜனக்கூட்டத்தை அது கொண்டு வந்து விடுகிறது, சிலர் விசுவாசிகளாகவும், சிலர் அவிசுவாசிகளாகவும் இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில், அந்நாட்களில் இருந்த பண்டிதர்களில் அநேகர், வேதவாக்கியத்தை மிகவும் நன்கு கற்ற மனிதர்களாக இருந்தார்கள், அதாவது, தங்களுடைய சொந்த வேத சாஸ்திரத்தில் அவர்கள் அவ்வாறிருந்தார்கள், அந்தப் பரிசேயர்களும் சதுசேயர்களும் மோசமான மதிப்பை உடைய மனிதர்களல்ல, ஆனால் அவர்கள் நல்ல நற்பெயருடைய மனிதர்களாகவும், தேவனுடைய வீட்டில் தங்கள் அலுவலைத் தொடர்ந்து செய்ய கட்டாயமாக பழிச்சொல்லுக்கும் மேலான வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய மனிதர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஒரு ஆசாரியனாக ஆகக்கூடும் முன்பதாக, அவர்கள் ஒரு குறிப்பிட்ட வம்சத்தைச் சேர்ந்த ஜனங்களிலிருந்து பிறந்தாக வேண்டிய மனிதர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு முன்பு, அவர்களுடைய தகப்பன்மார்களும் ஆசாரியர்களாக இருக்க வேண்டியிருந்தது. 8. ஒரு நல்ல, படித்த மனிதன், தன்னுடைய வேதாகமப் போதனைகளில் மிகவும் அறிவாளியாக இருந்தாலும், அவன் ஒரு அவிசுவாசியாக இருக்க முடியும். இன்றிரவு அமெரிக்காவில் நம்மிடமிருக்கும் அநேக மனிதர்கள், அந்நாளில் இருந்த அந்த ஆசாரியர்களின் பாண்டித்தியத்தோடு போட்டியிட முடியும் என்று நான் இன்றிரவு நினைக்கவில்லை, அவர்கள் கற்றுத்தேர்ந்த மனிதர்களாக இருந்தார்கள். மேலும் நல்ல நடத்தைக்குரிய விஷயத்திற்கு வரும் போது, அவர்கள் குற்றமற்றவர்களாகக் காணப்பட வேண்டியிருந்தது. இன்று இவர்களுக்கு ஞானோபதேசம் தெரிந்திருப்பது போன்று, அவர்கள் தங்கள் வேதவாக்கியங்களை அறிந்திருந்தார்கள். ஆனாலும், இவை எல்லாவற்றிலும், மனிதர்கள் எப்போதுமே மிகவும் உத்தமமாக இருந்து, எப்பொழுதும் அவ்வளவாக ஒரு வேதப் பண்டிதராயிருக்க முடிந்தாலும், இன்னுமாக அவர்களுடைய போதகங்களில் தவறாயிருக்க சாத்தியமுண்டு. அவர்கள் அவ்வாறு இருக்க முடியும் என்று இது நிரூபிக்கிறது. 9. நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தருடைய மகத்தான, அற்புதமான கிரியைகளைக் குறித்து இந்த பரிசேயர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர் ஒரு புதிய உபதேசத்தை உடையவராக இருப்பதாக அவர்களுக்கு வெளித்தோற்றத்தில் தெரிந்தது. இப்பொழுது அதைக் குறித்து நம்மால் சிந்தித்துப் பார்க்கக்கூடிய மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட காரியம் என்ன என்றால், அது வேதாகமத்தின் வேதவாக்கிய உபதேசத்திற்குச் சரியாகவே இருந்தது. தேவன் அவரோடே கூட கிரியை நடப்பித்து, அவர் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்த வசனங்களை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அதுதான், அவர் கூறிக் கொண்டு இருந்தவைகளை தேவன் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது தான் வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. மனிதனால் வாக்குமூலங்களைக் (statements) கொடுக்க முடியும், ஆனால் தேவன் அந்த வார்த்தையை உறுதிப்படுத்தாவிட்டால், அது அவ்வண்ணமானது அல்ல. தேவன் எப்போதுமே தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துவார். ஆனால் இயற்கைக்கு மேம்பட்டவைகள் எங்கே செய்யப்படுகிறதோ, அப்போது அது பல வகைப்பட்ட ஜனக்கூட்டத்தின் (mixed multitude) கவனத்தை ஈர்த்துக் கொள்கிறது. நமக்கு நேரம் இருக்குமானால், நாம் கீழே எகிப்திற்குச் சென்று, மோசேயும் ஆரோனும்.. போது, பார்க்க முடியும். அவர்கள் எகிப்தில் இருக்கையில், இயற்கைக்கு மேம்பட்டவைகள் செய்யப்பட்டது. ஒரு பல வகைப்பட்ட ஜனக்கூட்டமானது வனாந்தரத்தில் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தார்கள், கடைசியாக அவர்கள் கோரா எதிர்த்து நின்ற காரியத்தில்) அழிந்து போனார்கள். ஆனால் தேவன் எப்போதுமே தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஜீவனுள்ள தேவன் தம்முடைய வார்த்தையில் ஜீவித்து, ஒவ்வொரு தலைமுறையிலும் தம்முடைய வார்த்தையை உண்மையாக ஆக்கிவிடுகிறார். 10. வேதாகமம் கூறுவது போல, அவர் ஒரு பிசாசு அல்லது பெயல்செபூல் என்று அவர்கள் அவரை குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள். பெயல்செபூல் என்பது பிசாசுகளின் தலைவனாயிருந்தது. அவர்கள் அவரை அவ்வாறு அழைத்ததற்கு காரணம் என்னவென்றால், அவர் தாம் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தினர் ஊடாக நோக்கிப்பார்த்து, மனிதர்களை பெயர் மூலமாக அறிய அவரால் கூடும்படியாக, அவர் ஒரு குறிப்பிட்ட வல்லமையால் தரிப்பிக்கப்பட்டிருந்தது தான் அதற்கு காரணம். அதோடு கூட அவர்களுடைய இருதயத்திலிருந்த நினைவுகளையும் அவரால் அவர்களிடம் கூற முடிந்தது. நன்கு பயிற்றுவிக்கப்பட்டு (well-trained), தெரிந்து கொள்ளப்பட்ட யூதன் ஒருவன், பிலிப்பு என்ற பெயருடைய இயேசுவின் சீஷர்களில் ஒருவன் விரும்பி அழைத்ததால், அவன் அவரிடம் வந்தான். அவன் ஜெபம் செய்து கொண்டிருந்த நாத்தான்வேல் என்ற தன்னுடைய நண்பனைக் கண்டு, அவனை இயேசுவிடம் அழைத்து வந்தான் (brought). இயேசு இந்த மனிதனைக் கண்ட போது, அவர், "இதோ, கபடற்ற ஒரு இஸ்ரவேலன்" என்றார். அதற்கு அவன், “ரபீ, நீர் என்னை எப்பொழுது அறிந்து கொண்டீர்?" என்று கேட்டான். அது அவனை பிரமிக்கச் செய்தது. அவர், "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அந்த மரத்தின் கீழ் இருக்கும் போதே, உன்னைக் கண்டேன்” என்றார். அதன் பிறகு, உண்மையான எபிரெயனாயிருந்த இம்மனிதன், வேதவாக்கியங்களை அதனுடைய சரியான வெளிச்சத்தில் அறிந்து, "நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் இராஜா!" என்றான். இயற்கைக்கு மேம்பட்ட ஒரு செயல் நடந்திருந்த காரணத்தினால், அது மேசியாவாக இருக்க வேண்டுமென்று அவன் அடையாளம் கண்டு கொண்டான். 11. ஆனால் அந்நாளில் இருந்த பரிசேயர்களும், பண்டிதர்களும், அறிவாளிகளும், "இந்த மனிதன் பெயல்செபூல். பிசாசின் கிரியைகளின் மூலமாக, அல்லது பிசாசுகளின் வல்லமையின் மூலமாக, இவன் இந்தக் காரியங்களைச் செய்கிறான்" என்றார்கள். அதற்கு இயேசு, "சாத்தான் சாத்தானைத் துரத்தக் கூடுமானால், அவனுடைய இராஜ்யம் பிரிந்திருக்குமே” என்றார். And as far - என்னைப் பொறுத்தவரையில், சுகப்படுத்த சாத்தானுக்கு எவ்விதத்திலும் எந்த வல்லமையுமே கிடையாது என்பதை அறிந்து கொள்ள அது எனக்கு திருப்தியளிக்கிறது. சுகமளித்தல் என்பது சிருஷ்டித்தலாக இருக்கிறது. சாத்தான் ஒரு சிருஷ்டிகன் அல்ல. தேவன் ஏற்கனவே சிருஷ்டித்தவைகளை அவனால் தாறுமாறாக்க மாத்திரமே முடியும். தேவன் மாத்திரமே சுகமளிப்பவராயிருக்கிறார். ஆகையால், தெய்வீக சுகமளித்தலைத் தவிர வேறு எந்த சுகமளித்தலுமே கிடையாது. மருந்து கட்டியெழுப்புவதோ, அல்லது சிருஷ்டிப்பதோ கிடையாது. மருந்தானது நோய்க்கிருமிகளைக் (germs) கொன்று போடுகிறது. ஆனால் அறுவை சிகிட்சையானது ஒரு -ஐ- காரணமானவைகளை அகற்றுகிறது. ஆனால் தேவனே சுகமளித்தலைச் செய்கிறார். "உன் சகல வியாதிகளையும் சுகப்படுத்துகிற கர்த்தர் நானே." 12. இப்பொழுது, தெய்வீக சுகமளித்தலைக் குறித்து இன்று மிகவும் அதிகமாகக் கூறப்படுவதை நாம் காண்கிறோம். மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணரைக் குறித்து, "அங்கே அந்த கசாப்பு கடைக்காரனிடம் (butcher) போகாதே. உனக்கு எந்த அறுவை சிகிச்சையும் அவசியமில்லை" என்று கூறுவதை நாம் காண்கிறோம். நீங்கள் அறுவை சிகிச்சை நிபுணரிடம் போக, அவர் அந்த மருத்துவ -அவர் அந்த மருத்துவரைக் குறித்து, "மருந்தேயில்லாத மாத்திரைகள் உனக்குத் தேவையில்லை. உனக்கு ஒரு அறுவை சிகிட்சை தான் அவசியமாயுள்ளது” என்று கூறுவார். இருவருமே வர்மமுறை மருத்துவரைக் குறித்து, "அவர் உன்னுடைய எலும்புகளை ஒடித்துப் போடுவாரே தவிர வேறொன்றையும் செய்ய மாட்டார்” என்று கூறுவார்கள். அந்த வர்மமுறை மருத்துவர் எலும்புகளையும் தசைகளையும் இயக்குவதன் மூலமாக நோய் நீக்கும் மருத்துவரைக் (osteopathic) குறித்து, "அவர் உன் சரீரத்தை மசாஜ் (rub down) மாத்திரமே செய்வார்" என்று அதே காரியத்தையே கூறுவார். அவர்கள் எல்லாருமே, "பிரசங்கியார் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது என்பது முறையற்றது” என்று கூறுகிறார்கள். 13. நாம் அதைச் சரியான வெளிச்சத்தில் பார்ப்போமானால், அவர்கள் கொண்டிருக்கும் அப்படிப்பட்ட மனப்பான்மைகளை நீங்கள் காணும் போது, எங்கோ அதற்குப் பின்னால் ஒரு சுயநலமான உள்நோக்கம் இருக்கிறது என்பதைத் தான் அது நிரூபிக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் நல்லதைத் தான் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். மருத்துவரும், வர்ம முறை மருத்துவரும் எலும்புகளையும் தசைகளையும் இயக்குவதன் மூலமாக நோய் நீக்கும் மருத்துவரும் (osteopathic) நல்லதைத் தான் செய்கிறார்கள் என்று நாம் அறிவோம். நாம் நம்முடைய சக மனிதனுக்காக சரியான அனுதாபத்தைக் கொண்டிருந்து, நம்முடைய நோக்கங்களும் சரியாக இருந்து, அதனோடு பணமானது தொடர்பில்லாமல் இருந்தால், அவன் இந்தப் பாதையினூடாகக் கடந்து போகையில், அந்த யாத்திரிகனுடைய ஜீவியத்தை இன்னும் கூடுதல் மகிழ்ச்சியானதாகச் செய்யும்படி நமது கரங்களையும் பிரயாசங்களையும் ஒன்று சேர்த்திருப்போம். அதற்குப் பின்னால் இருக்கும் உள்நோக்கம் தான், அந்த மனிதன் எப்படிப் பட்டவன் என்று கட்டுப்படுத்துகிறது. இதற்காக இயேசு அவர்களைக் கடிந்துகொண்டு வந்தார். 14. இப்பொழுது, எல்லா காலங்களிலும், வேலை செய்கிற தமது வேலையாட்களை தேவன் உடையவராய் இருந்திருக்கிறார். சென்று போன வேதாகம காலங்களில், ஒரு அற்புதம் நடக்கும் போது, இந்த அற்புதத்திற்காக அவர்கள் அப்படியே கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்கள். ஆனால் நாம் வித்தியாசமான ஒரு நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தெய்வீக சுகமளித்தலைக் குறித்து யாராவது எதையாகிலும் கூறும் போது, அவர்கள் கீழ்நிலைக்குச் சென்று, ஒரு மருத்துவரைப் பிடித்து, அவன் அதைப் பரிசோதனை செய்து பார்க்க வைத்து, அது உண்மையா என்று பார்க்க அதை ஆராய்ந்து பார்க்கிறார்கள். அது தான் அவிசுவாசத்திற்கு மிகவும் அடிப்படை அஸ்திபாரமாக இருக்கிறது. "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் பொருளாகவும் (substance), காணப்படாதவைகளின் அத்தாட்சியாகவும் இருக்கிறது". நாம் சுகமடைந்து விட்டோம் என்று விசுவாசிக்கும் காரணத்தினால், நாம் சுகமானோம். 15. மோசே எரிகிற முட்செடியில், தூதனானவரைக் கண்டபோது, அவன், "நான் அதைக் கவனித்து, பிறகு அந்த இலைகளில் சிலவற்றை பறித்து, அவைகள் எரியாமல் இருக்க, அந்த இலைகளின் மேல் எந்தவிதமான இரசாயனம் தெளிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க அவைகளை ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்வேன்" என்று கூறியிருந்தால், என்னவாகியிருக்கும். தேவன் ஒரு போதும் அவனிடம் பேசி இருக்கவே மாட்டார். ஆனால் மோசேயோ தன்னுடைய காலணிகளைக் கழற்றி, பயபக்தியாக மேலே வந்து, எரிகிற முட்செடியை நோக்கிப் பேசினான், அதுவும் திருப்பி அவனிடம் பேசினது. அவ்விதமாகத்தான் நாம் இன்று தேவனைப் பார்த்து செய்கிறோம். நாம் விஞ்ஞானப் பூர்வமாக இதையும் அதையும் முயற்சிப்பதில்லை; நாம் அப்படியே தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்து, இல்லாதவைகளையும், அவைகள் இருக்கும் விதமாக அழைக்கிறோம். எந்த ஆய்வகப் பரிசோதனையும் நமக்கு அவசியமில்லை. தேவனுடைய வார்த்தை பரிசோதனைக்குப் போதுமானதாக உள்ளது. தொடர்ந்து காலங்கள் தோறும், அது சரியென்று ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. நமக்குத் தேவையானது எல்லாமே அவ்வளவு தான். ஆனால் அந்நாட்களில், ஜனங்கள் அற்புதங்களுக்குப் பழகிப் போயிருந்தார்கள். அவர்கள் அதை ஒரு போதும் கேள்வி கேட்டதே கிடையாது. ஆனால் இன்றைக்கு, விசுவாசிக்கோ அல்லது பலவீனமான விசுவாசிக்கோ, அதைக் கடினமாக ஆக்குகிற ஒரு தொடர்ச்சியான கேள்வியாக அது இருக்கிறது. 16. அதன்பிறகு நாம் மறுபடியும் கவனிப்பது என்னவென்றால், ஒவ்வொரு காலங்களினூடாக, தேவன், தமது கரங்களை அவன் மேல் வைத்து, அந்த நபர் மூலமாக கிரியை செய்யும்படியான யாரோ ஒருவரை ஏதோ இடத்தில் கொண்டிருக்கிறார். உலகம் துவங்கினது முதற்கொண்டு, ஒரு சாட்சியும் இல்லாமல் அவர் ஒரு போதும் இருந்ததில்லை. ஒவ்வொரு காலத்திலும், அவர் சாட்சிகளை உடையவராயிருந்தார். சென்று போன அந்த நேரத்தில், நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் (facing), இஸ்ரவேலின் அந்த மகத்தான, பொற்காலத்தில், தேவன், சாலமோன் என்ற பெயருடைய ஒரு மனிதனுக்கு வரத்தைக் கொடுத்திருந்தார். அவன் உலகம் முழுவதும் உள்ள சகலத்தையும் அறிந்திருந்தான், அவன் ஞானமுள்ள மனிதனாக இருந்தான் என்று அங்கே வேதாகமத்தில் வாசிக்கிறோம். ஜனங்களை வழிநடத்த, தனக்கு ஞானத்தைக் கொடுக்கும்படி அவன் தேவனிடம் ஜெபித்தான். சபைக்கு ஒரு வரம் கொடுக்கப்படும் போது, சபையானது அந்த வரத்திற்குச் செவி கொடுக்க மறுக்கும் போது, அந்த வரமானது பலனில்லாமல் ஆகிவிடுகிறது. ஆனால் வரமானது சபைக்குக் கொடுக்கப்பட்டு, சபையானது அதை ஏற்றுக்கொள்ளும் போது, அந்த சபைக்கு அது ஒரு பொற்காலமாக இருக்கிறது. இஸ்ரவேல் சாலமோனின் கீழாக, அதனுடைய பொற்காலத்தில் ஜீவித்துக் கொண்டிருந்தது. இந்த அற்புதமான வரத்தினிமித்தமாக, சகல இஸ்ரவேலரும் தேவனை மகிமைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அது பரிபூரணமாக கிரியை செய்து வந்தது. அது வெறுமனே போலியாகப் பாவனை செய்யப்பட்ட ஏதோவொன்றாக இல்லாது இருந்தது என்று, அவர்கள் அந்த விளைவு களையும் (results) பார்க்க முடிந்தது. அது தேவனிடமிருந்து வந்த ஒரு உண்மையான வரமாய் இருந்தது. 17. அதன் பிறகு இந்தச் செய்தியானது கடந்து சென்று, தேசத்தினூடாக வந்து கொண்டிருந்தது, தேவனுடைய இந்த மகத்தான வரத்தைக் குறித்து கேள்விப்பட்டு, அவர்கள் போய் மற்றவர்களுக்கும் சொல்லியிருப்பார்கள். அவ்விதமாகத்தான் நல்ல செய்தி பரவுகிறது: ஒருவர் மற்றவருக்கு கூறுகிறார்கள். அதன் பிறகு, அறியப்பட்ட உலகத்தின், மிக தூரத்திலுள்ள பாகங்களில், அங்கே தாழ்வான இடத்தில், ஒரு சிறு ராணி இருந்தாள், அநேகமாக, அவள் சேபாவின் ராணி என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு அஞ்ஞான ராணியாக (heathen queen) இருந்தாள். ஜனங்கள் இஸ்ரவேல் தேசத்தினூடாக உருவக் கடந்து, அவளுடைய மகத்தான இராஜ்யத்திலே பிரயாணம் பண்ணி வந்து, “இஸ்ரவேலருக்கு தேவன் அருளியுள்ள அந்த மகத்தான வரத்தை நீங்கள் பார்க்க வேண்டும்" என்று கூறிக் கொண்டிருந்தார்கள். 18. விசுவாசமானது, அதைக் குறித்துப் பேசுவதைக் கேட்பதனால் வருகிறது என்று உங்களுக்குத் தெரியும். நாம் தேவனைப் பற்றிய நற்காரியங்களைக் குறித்து போதுமான அளவு பேசுவதில்லை. இன்றிரவு, ஜீவனுள்ள தேவனுடைய சபையானது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் குறித்தும், ஏதோவொரு விதமான பந்து விளையாட்டைக் குறித்தும், அல்லது அதைப் போன்ற எதைக் குறித்துமே மிக அதிகமாகப் பேசிக் கொள்கிறார்கள் (took up). நீங்கள் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையைக் குறித்து சாட்சி பகர்ந்து, உங்களுடைய முழு ஜீவியமும் அதில் சுற்றிப் போர்த்தப்பட அனுமதியுங்கள். 19. அவ்வண்ணமாக, ஜனங்கள் வந்து போய்க் கொண்டு இருக்கையில், அதிகமாக கேள்விப் பட்டதானது அதைக்காண ஒரு பசியை ஏற்படுத்தும் அளவுக்கு, அந்தச் சிறு ராணியானவள் அதைக் குறித்து தொடர்ந்து அதிகமாகக் கேள்விப்பட்டுக் கொண்டே இருந்தாள். நீங்கள் தொடர்ந்து சரியான ஜீவியத்தைச் செய்து, இயேசு உங்களுக்கு எவ்வளவு நல்லவராக இருந்திருக்கிறார் என்று ஜனங்களிடம் கூறுவீர்களானால், அவர்கள் அதைக்குறித்த ஏதோ ஓன்றை, இந்த எல்லா முட்டாள்தனம் மற்றும் உலகப்பிரகாரமான இன்பங்களின் இடத்தை எடுத்துக்கொள்ளும் ஏதோவொன்றை, அறிய ஏக்கங்கொள்ளத் தொடங்குவார்கள். நான் சென்ற மாலையில் கூறினபடி, மனிதர்களுக்கும் ஸ்திரீகளுக்கும், அவர்களுக்கு எவ்வளவு துணிகரம், இந்தக் காரியங்களைச் செய்ய உங்களுக்கு எந்த உரிமையுமே கிடையாது. நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல. ஆனால் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தமாகிய கிரயத்துக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுடைய ஜீவியத்தை வீணாக்குவதற்கும், நீங்கள் வாழ்கிற விதமாக வாழுவதற்கும், நீங்கள் உங்களுக்கு சொந்தமானவர்கள் அல்ல. கிறிஸ்து (கிரயத்துக்குக் கொண்ட அந்த ஜீவியத்தை எடுத்து, அதை பிசாசுக்கு முழுவதுமாக விற்றுப்போட உங்களுக்கு சட்டப்படியான எந்த உரிமையும் கிடையாது. அதைச் செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. 20. நான் கூறியபடி, அந்தத் தாகம், உங்களிலுள்ள அந்தத் தாகமான உணர்வு, அந்தத் தாகத்தோடு தான் தேவன் உங்களை உண்டாக்கியிருக்கிறார். உங்களுக்கான தேவனுடைய உருவாக்கத்தில் அது ஒரு பாகமாக இருக்கிறது. அவர் உங்களை உண்டாக்கி, அவருக்காக ஒரு தாகத்தை - ஒரு தாகத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். ஆனால் நீங்களோ அதை, நடனமாடுதல், மது அருந்துதல், புகைப்பிடித்தல், சூதாடுதல், இச்சித்தல் போன்ற உலகப்பிரகாரமான பொழுது போக்குகளைக் கொண்டு திருப்திப்படுத்த முயற்சிக்கிறீர்கள், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த தாகத்தை உலகக் காரியங்களைக் கொண்டு திருப்தி செய்ய முயற்சிக்கிறீர்கள். அதைச் செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, நீங்கள் அவ்வாறு செய்வதன் மூலமாக, தேவனை ஏமாற்றி, திருடி விடுகிறீர்கள். 21. இந்தச் சிறு இராணி தாகங்கொள்ளத் தொடங்கினாள். அவள் ஏதோவொன்றைக் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பதை அறிந்து கொண்டாள், அது உண்மையாக மாத்திரம் இருக்குமானால், அது மெய்யாக மாத்திரம் இருந்தால், எதையும் செய்ய அவள் விருப்பம் உள்ளவளாயிருந்தாள். எனவே அவள் யாரோ ஒருவருடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்று தன்னுடைய மனதில் தீர்மானித்துக்கொள்கிறாள். எனக்கு அது பிடிக்கும். பிலிப்பு நாத்தான் வேலைக் கண்டுபிடித்த போது, அல்லது நாத்தான்வேல் கண்டுபிடித்தபோது, அல்லது பிலிப்பு நாத்தான் வேலை அந்த மரத்தின் கீழே கண்டுபிடித்த போது, நாத்தான்வேல், "நாசரேத்தூரிலிருந்து நன்மையான காரியம் ஏதாகிலும் வர முடியுமா-?" என்று கேட்டான் என்று உங்களுக்குத் தெரியும். யாராகிலும் பதிலளிக்கக்கூடியதிலேயே மிகச்சிறந்த பதிலை பிலிப்பு அவனுக்குக் கொடுத்தான் என்று நினைக்கிறேன். அவன், "வந்து பார்" என்றான். திருப்தியடைவதற்கான வழி அதுதான்; வந்து பாருங்கள். 22. அந்தச் சிறு இராணி, அவள் மரிக்கக்கூடியவள் என்றும், அவள் நிச்சயமாக இருண்ட நித்தியத்திற்குப் போக வேண்டுமென்றும் அறிந்து கொண்ட போது. அறியப்படாத உலகத்தில் இருந்து வரும் கொஞ்சம் ஒளிக்கதிர் அவளை நோக்கி இருந்திருக்குமானால், அது அவளுடைய நித்தியமாகச் சேருமிடத்தை நோக்கி ஏதாவது ஒன்றை பிரதிபலித்துக் காட்டியிருக்கும், அவளாகவே அதைக் காண வேண்டுமென்பதாக தீர்மானம் செய்து கொண்டாள். இன்றிரவு ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அந்த வாஞ்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் தேவனிடம் விருப்பமுள்ளவனாயிருக்கிறேன். இப்பொழுது, ஆகையால் அவள் போவதற்காக ஆயத்தங்களைச் செய்தாள். மேலும் இப்பொழுது, அவளுக்கு எதிராக நின்று கொண்டிருந்தது என்னவென்று ஞாபகம் கொள்ளுங்கள். முதற்கண், அவள் ஒரு பெண்ணாக இருந்தாள். ஏறக்குறைய மூன்று மாதங்கள் பாலைவனத்தில் அவளுக்கு பிரயாணம் இருந்தது, குளிரூட்டப்பட்ட ஒரு காடிலாக் காரில் அல்ல, ஆனால் ஒரு ஒட்டகத்தின் முதுகில் தான் பிரயாணம். சில சமயங்களில், இயேசு அப்படியே வந்து, தம்மைத்தாமே அவர்களுடைய தொண்டையில் நுழைக்க வேண்டுமென்று ஜனங்கள் விரும்புகிறார்கள். அவர் அவ்விதமாக வருவது கிடையாது. உங்களுக்கு விருப்பம் இருந்தாக வேண்டும். 23. எனவே அது உண்மையா இல்லையா என்று காணும்படிக்கு, அந்த உண்மையான விசுவாசமானது அவளுடைய இருதயத்தில் வைக்கப்பட்டிருந்த போது, கிரயம் என்னவென்று அவள் கவலைப்படாமல், அது உண்மையா அல்லது இல்லையா என்று காண தீர்மானித்து விட்டாள். இந்தியானாபோலிஸில் நடக்கும் இந்தக் கூட்டத்தைக் குறித்த இந்த வதந்தியானது, ஜனங்கள் வந்து, இந்த ஒரு கூட்ட ஜனங்கள் உண்மையான பரிசுத்தாவியைக் கொண்டிருக்கிறார்களா அல்லது இல்லையா என்றும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியம் இருக்கிறதா என்றும் காண ஜனங்களை ஒன்று சேர்த்து ஒன்று கூட்டுவதை மாத்திரம் அது உடையதாயிருக்குமானால்.... அவர்கள் தங்களுடைய ஜீவியத்தை ஏதோவொரு சபைக் கோட்பாட்டுடனோ அல்லது ஏதோவொரு உலகப்பிரகாரமான பொழுதுபோக்குடனோ மோசம் செய்து (choked out), தங்களுடைய வாழ்க்கையை அழித்து போடாதிருந்திருப் பார்களானால், அவர்கள் அதைச் செய்திருப்பார்கள். கிறிஸ்து அந்த இடத்தைக் கொண்டிருக்க வேண்டியிருக்கும் போது, அவர்கள் அந்தக் காரியங்களைக் கொண்டு அந்தத் தாகத்தைத் திருப்தி செய்து விடுகிறார்கள். அது சரியே. 24. இப்பொழுது கவனியுங்கள், ஒரு ஒட்டகத்தின் முதுகில் இருந்து கொண்டு அந்தப் பாலைவனத்தைக் கடப்பதற்கு அவளுக்கு ஏறக்குறைய 90 நாட்கள் பிடிக்கும். அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று அதை உங்கள் உலக வரைபடத்தில் (map) அளந்து பாருங்கள். அது மட்டுமல்ல, ஆனால் அந்த பாலைவனத்தில் ஆபத்தான அபாயங்கள் இருந்தன. கொள்ளைக் காரர்களாகிய இஸ்மவேலின் பிள்ளைகள் அங்கே இருந்தார்கள். மேலும் அவர்கள்.... அங்கே வெளியில் தனியாக இருந்த அந்தப் பரிதாபமான சிறு பெண் எம்மாத்திரம், மேலும் அவள் ஒரு இராணியாக இருந்தாள். மேலே கொள்ளைக்காரர்களாகிய அந்தப் பெருந்திரளான இஸ்மவேலர்களின் பக்கத்தில் அவளுடைய கொஞ்சமான சிறிதளவு அண்ணகராகிய பணியாட்கள் எம்மாத்திரம்? "நானே போய்ப் பார்ப்பேன்" என்று, அவள் இதைச் சொன்னது மட்டுமல்ல. ஆனால் அவள், “நான் என்னோடு ஒரு காணிக்கையையும் கொண்டு போவேன். அந்தக் காரியம் சரியாக இருக்குமானால், என்னிடம் இருக்கிற எல்லாவற்றைக் கொண்டும் அதை தாங்கப் போகிறேன்" என்றாள். எனக்கு அது பிடிக்கும். அவள் தன்னுடைய ஒட்டகங்களிலே தூபவர்க்கத்தினாலும், பொன் வெள்ளியினாலும் பெரிய அளவில் ஏற்றினாள். கொள்ளைக்காரனுக்கு என்னவொரு முழு நிறைவான அமைவு. ஆனால் அவள் அதைக் காண்பாள் என்ற விசுவாசத்தை உடையவளாய் இருந்தாள். கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தாரா இல்லையா என்று காண நீங்கள் தீர்மானித்து, கிரயத்தைக் குறித்துப் பொருட்படுத்தாமல் இருப்பீர்களானால், அதைக் காண தேவன் உங்களுக்காக ஒரு வழியை ஏற்படுத்துவார். அது சரியே. 25. அவள் தன்னுடைய காணிக்கைகளை எடுத்து, அவைகளை தன்னுடைய ஒட்டகங்களின் மேல் வைத்து, அந்தச் சிறு பெண்ணாகிய அவளும் அங்கு உட்கார்ந்து கொண்டு, தேவனுடைய இந்த மகத்தான வரம் உண்மையாகவே கிரியை செய்கிறதா என்று பார்க்கும்படி தீர்மானித்து, அவள் பகலும் இரவும், பகலும் இரவுமாக, அந்தப் பாலைவனத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தாள். அவள், "என்னுடைய நாளில் இப்படிப்பட்டவைகளை நான் ஒரு போதும் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அது சரிதானா என்று போய்ப் பார்ப்பேன்" என்று எண்ணினாள். கடைசியாக அவள் முன் வாயில்களுக்குப் போய்ச் சேர்ந்து விட்டாள். எழுப்புதலின் வெறுமனே ஒரு இரவுக்காக தங்கும்படி அவள் வரவில்லை. அவள் முற்றிலுமாக உறுதிகொள்ளும் வரையில் அவள் தங்கப் போவதாந் இருந்தாள். ஓ, தேவனே, ஜனங்கள் அந்த மனப்பான்மையைப் பெற்றுக்கொள்ளும்படி ஜெபிக்கிறேன்: அது முடியும் மட்டுமாக தரித்திருத்தல்; நீங்கள் அறிந்துவிட்டீர்கள் என்ற நிச்சயத்தோடிருங்கள். மேலே பீடத்திற்கு நடந்து சென்று, "நான் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க நீர் விரும்பினால், அதை எனக்குத் தாரும். நல்லது. நீர் அதைத் தராவிட்டால், நான் திரும்பிப் போய் விடுகிறேன். அது மிகவும் சுலபமான காரியம்" என்று கூறாதீர்கள். ஆகையால் தான் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வதில்லை. நீங்கள் ஜெபிக்கப்படும் போது, “நான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை. குணமடைய அங்கே எதுவுமேயில்லை என்று யூகிக்கிறேன்." நீங்கள் முற்றிலுமாக உறுதிகொள்வது வரையில், தரித்திருங்கள். 26. அவள் ஒட்டகங்களிலிருந்து அவைகளை இறக்கினாள். அவள் தன்னுடைய படைவீரர்களை குறிக்கப்பட்ட இடத்தில் வைத்துவிட்டு (put away), அவள் அரண்மனையின் உட்காருமிடத்தை நோக்கி நடந்து சென்று, கதவண்டை நின்று, தேவனுடைய இந்த மகத்தான வரமானது சாலமோன் மேல் அசைவாட ஆரம்பிப்பதைக் கண்டாள், அவள் ஆவியானவரின் அந்த பகுத்தறிதலைக் கண்டபோது, அவனுடைய ஞானத்திற்கு நிகராகக் கூடிய யாருமே அவனுக்கு முன்பாக வராமல் இருக்கும் அளவுக்கு (அது இருந்தது... அவனிடம் ஒரு பகுத்தறியும் ஆவி இருந்தது. மேலும் அவள் அநேக நாட்களாகத் தங்கியிருந்து, கவனித்து வந்தாள். அவள் முழுவதும் உறுதி கொண்ட பிறகு, அவள் சென்று, தன்னுடைய ஒட்டகங்களில் சுமைகளை ஏற்றி, ஆதரவு கொடுக்கும்படியாக பெரும் காணிக்கைகளை கொடுத்தாள். மேலும் அது மட்டுமல்ல, அவள், “நான் கேள்விப்பட்ட எல்லாமே சரியாக இருந்திருக்கிறது, நான் கேள்விப் பட்டவைகளைக் காட்டிலும் இன்னும் கூடுதலாகவே உள்ளது" என்றாள். ஓ, ஜீவனுள்ள தேவனுடைய சபையானது, அவர்கள் சிலுவையின் அடியில் தங்கியிருந்து, இயேசு கிறிஸ்து ஜீவித்து ஆளுகைச் செய்கிறார் என்பதைக் குறித்து அவர்கள் முழுவதுமாக உறுதி கொள்ளும் வரையில் தங்களைத் தாங்களே தாழ்த்தும்படியான ஒரு நிலைக்கு வர மாத்திரம் முடியுமானால். 27. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இது ஒரு மகத்தான மணிவேளையாக உள்ளது, நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு மகத்தான நாளாகும். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற ஒரு கிருபாதார பலியாக (propitiation) தேவன் தம்முடைய குமாரனை அனுப்பியிருக்கிறார். அவர் நமக்குப் பதிலாக மரித்தார். குற்றவாளிகளான நாம் குற்றமில்லாதவர்களாயிருக்கும்படி, பாவம் ஆன (became guilty) குற்றமற்ற ஒருவராக அவர் இருந்தார். இதுதான் அந்தக் கதை. உங்களுடைய சொந்த வஞ்சகமான ஜீவியத்தை அவருடைய சமுகத்தில் நீங்கள் மதிப்பீடு செய்கையில், இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவருடைய கிருபையின் மூலமாக, நீங்கள் அவராக ஆகும்படி, இயேசு நீங்களாக ஆனார். நரகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த நீங்கள், நீங்கள் பரலோகத்தில் அவரோடு கூட அவருடைய இடத்தில் உட்காரும்படி, அவர் உங்கள் இடத்தை எடுத்துக்கொண்டார். சுபாவத்தின் மூலமாக பிசாசினுடைய ஒரு மகனாக இருந்த நீங்கள், தேவனுடைய ஒரு குமாரனாக ஆகி, அவரோடு கூட உன்னதங்களில் உட்காரும்படி, உங்களுடைய சுபாவத்தை அல்லது உங்கள் சுபாவம் சம்பந்தப்பட்ட பாவத்தை அவர் ஏற்றுக்கொண்டார். அதுதான் அந்தக் கதை. சாட்சி இல்லாமல் அவர் நம்மை விட்டுவிடவில்லை. 28. "கொஞ்சக்காலத்திலே, உலகம் என்னைக் காணாது, ஆயினும் நீங்கள் என்னைக் காண்பீர்கள், நான் ('நான்' என்பது தனிப்பட்ட பிரதிபெயர்), நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருப்பேன். நான் என் பிதாவினிடத்தில் போகிறபடியினால், நான் செய்கிறவைகளை நீங்களும் கூட செய்வீர்கள். இதைக் காட்டிலும் இன்னும் கூடுதலாகச் செய்வீர்கள். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை அவனும் கூட செய்வான்" என்று கூறியிருக்கிறார். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். நான் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அவர் உங்களுக்கு சத்தியபரராகிய பரிசுத்த ஆவியை (Holy Spirit of truth) அனுப்புவார். பரிசுத்த ஆவி, அவர் வந்த போது, இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்க வேண்டியவராயிருந்தார். இப்பொழுது, அது உண்மை இல்லை என்றால், தேவன் தம்மால் செய்ய முடியாத ஏதோவொன்றை வாக்குத் தத்தம் பண்ணிவிட்டார். 29. ஆனால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான நாத்திகவாத (atheotic), நாஸ்திக, அவிசுவாசமுள்ள காலத்தில், எல்லாவித அஞ்ஞான தேவர்கள், மற்ற எல்லாமும், விக்கிரகங்கள், மற்றும் உலகப்பிரகாரமாக ஜீவித்தல் ஆகியவற்றின் மத்தியிலும், அங்கே ஒரு உண்மையான, உயிர்த்தெழுந்த, கலிலேயாவில் நடந்த போது இருந்தது போலவே, இன்றிரவும் அப்படியே அவ்வளவு நிஜமாக (real) இருக்கிற ஜீவனுள்ள இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்ற உண்மையின் பேரில், உலகத்திடமாக என்னால் சவால்விட முடிகிறதற்காக நான் மிகவும் சந்தோஷப் படுகிறேன். அவர் தோல்வியடையவில்லை. அவர் தோற்றுப் போகவே மாட்டார். இந்த மகத்துவமான இயேசு இப்பொழுது நம் மத்தியில் இருக்கிறார். தாம் உயிரோடிருப்பதாக, அவர் தாமே அறிவிக்கிறார். அவர் தவறிப் போக முடியாத, எங்கும் பிரசன்னராகவும், எங்கும் நிறைந்து இருக்கிறவராகவும், சர்வவல்லமையுள்ளவராகவும், முடிவில்லாத தேவனாகவும் இருக்கிறார். 30. பாவியான எனது நண்பனே, உனக்கு முன்பாக உள்ள உனது நித்தியமான சேருமிடத்தோடு கூட இங்கே இந்த பூமியின் மேல் நீ உன்னுடைய யாத்திரையில் இருக்கையில், நான் இன்றிரவு உன்னைக் குறித்து கேட்கிறேன், இன்றிரவு உனக்கு முன்பாக சரியான காரியமும் தவறான காரியமும் வைக்கப்பட்டிருக்கிறது. தேவன் தம்மை நேசிப்பதற்கு உனக்குக் கொடுத்திருக்கிற அந்தத் தாகத்தைத் தணிக்கும்படி நீ வாஞ்சித்து, அந்தப் பரிசுத்த தாகத்தைத் தணிக்க முயல்வதற்கு அதற்குள்ளே உலகப்பிரகாரமான காரியங்களை இழுத்துக் கொண்டு இருப்பீர்களானால், பரலோகத்தின் தேவன் தம்முடைய குமாரனை உயிரோடு எழுப்பி, உனக்கு இருக்கும் ஒவ்வொரு தாகத்தையும் எடுத்து, அதைத் தணித்து, ஆசீர்வதிக்கப்பட்ட சமாதானத்தை உனக்குக் கொடுக்கும்படியாக, இந்தக் காலத்தில் சபைக்கு ஒரு வரமாக பரிசுத்த ஆவியை அனுப்பியுள்ளார். நான் இன்றிரவு அவரை உங்கள் இரட்சகராகவும், தேவனுக்கும் மனுஷருக்கும் இடையேயுள்ள ஒரே மத்தியஸ்தராகவும் உங்களுக்குக் கொடுக்கிறேன். நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துகையில், நீங்கள் அக்காரியங்களை சிந்தித்துப் பார்க்க விரும்புகிறேன். உத்தமமாயிருங்கள்; அடுத்த நொடி அல்லது இரண்டு நொடி நேரத்திற்கு தேவனுக்கு முன்பாக அமைதியாக இருந்து, அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். 31. உங்கள் வாஞ்சைகள் எல்லாம் அவரில் முழுவதுமாக பூர்த்தியாகும்படிக்கு, கிறிஸ்து உங்களுக்கு அவ்வளவு திருப்தியான ஒருவராக ஆகிவிட்டாரா-? உங்களுடைய ஜீவியத்தின் உண்மையான நீரூற்றாக அவர் ஆகிவிட்டாரா-? அல்லது நீங்கள் அவரை வெளியே தள்ளி, இந்த உலகத்தின் இச்சைகளைக் கொண்டு உங்கள் ஏக்கங்களை திருப்தி செய்ய முயற்சிக்கிறீர்களா-? அல்லது சத்துருவின் வேறொரு தந்திரமாகிய, சபையைச் சேர்ந்து கொள்வதன் மூலமாகவும், நீங்கள் இரட்சிக்கப்படக்கூடிய ஒரே பரிகாரமாகிய, அந்த மகத்தான ஆவிக்குரிய பிறப்பை புறக்கணிப்பதன் மூலமாகவும், இந்த ஆசையைத் திருப்தி செய்ய முயற்சிக்கிறீர்களா-? ஜீவனின் உண்மையான காரண கர்த்தாவானவர், "ஒரு மனுஷன் தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் நிச்சயமாகவே உள்ளே பிரவேசிக்க மாட்டான்" என்று கூறியிருக்கிறார். நீங்கள் உங்களைத்தானே ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கே அப்படிப்பட்ட ஒரு நபர் இருப்பாரானால், "சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, நான் கிறிஸ்துவை வெறுமனே கொஞ்சம் ருசித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையில் அந்த இலவசமான நீரூற்றிலிருந்து ஒருக்காலும் பருகினதில்லை. நான் இன்னும் பகைமை எண்ணத்தையும் சண்டையையும் உடையவனாயிருக்கிறேன். நான் சபையைச் சேர்ந்தவன் தான், ஆனால் நான் ஒரு போதும் திருப்தி அடையவே இல்லை, என்னுடைய திருப்தியளிக்கும் பாகமாக (satisfying Portion) கிறிஸ்து இருக்க நான் விரும்புகிறேன். அவர்கள், ஆர்தர் காட்ஃபிரே, மற்றும் இந்த மற்ற உலகப் பிரகாரமான நடிகர்கள் எல்லாரும் தமாஷ் பண்ணுவதைக் காண நான் இன்னும் விரும்புகிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்" என்று கூறுங்கள். 32. நான் இப்பொழுது தான் ஒரு செய்தித்தாளில் (இதை) வாசித்தேன், அதில் ஒரு உரையாசிரியர் இரண்டு வருடங்களாக (இதை எடுத்திருக்கிறார். அந்த நடிகர்கள் ஒவ்வொருவரும், அவர்களை நல்ல நிலையில் பராமரிக்க மூன்று நான்கு மனநல மருத்துவர்களைக் கொண்டிருக்கிறார்களாம். நீங்கள் ஏன் கிறிஸ்துவிடம் வந்து, அவரை உங்கள் எல்லாவற்றிற்கும் போதுமான ஒருவராக, உங்கள் பாவத்தை சுமப்பவராக ஏற்றுக்கொள்ளக்கூடாது-? நான் இதை உங்களிடம் புரியும்படி சொல்லுவேனாக, அவர் வற்றாத ஜீவ நீரூற்றாய் இருக்கிறார். அவர் உங்களுக்கு தேவனுடைய வெகுமதியாய் இருக்கிறார். நாம் சபையில் எல்லாவிடங்களிலும் ஜெபித்துக் கொண்டு, அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கையில், இன்றிரவு கிறிஸ்துவை நோக்கி உங்கள் கரங்களை உயர்த்த விரும்புவீர்களா-? "தேவனே, என்னிடம் இரக்கமாயிருந்து, இன்றிரவு உம்முடைய பரிசுத்த ஆவியால் என்னுடைய இருதயத்தை தட்டி, நான் மிகவும் வாஞ்சிக்கிற அந்தத் திருப்தியளிக்கும் பாகத்தை எனக்குத் தந்தருளும்" என்று கூறுங்கள். நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு சற்று முன்பதாக, நீங்கள் அதைச் செய்வீர்களா-? சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, என்னுடைய சகோதரியே, உன்னையும், என்னுடைய சகோதரனே, உன்னையும். இப்பொழுது முழு சபையும் அப்படியே ஜெபத்தில் இருங்கள். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்கேயிருக்கும் எனது சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது-? மேலும் எனது சகோதரியே, அங்கே பின்னாலிருக்கும் எனது சகோதரனே, அங்கே, இங்கே கீழே, தேவன் உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக. "கிறிஸ்துவே, நான் உம்மை நோக்கி என்னுடைய கரத்தை உயர்த்துகிறேன். என்னுடைய நித்திய பங்காயிரும்." சகோதரனே, இங்கே பின்னால் நடுப்பிரகாரத்தில் (middle aisle) இருக்கும் உன்னையும், அப்படியே அவனுக்குப் பின்னாலிருக்கும் சகோதரியே உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. நீரே என்னுடைய சகல ஆறுதலின் நீரோடையாயிருக்கிறீர். இங்கேயுள்ள சகோதரியே உன்னையும், அவளுக்குப் பக்கத்திலுள்ள சகோதரனே உன்னையும், இங்கே பிரகாரத்திலுள்ள (aisle) உன்னையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அங்கு உங்கள் கரங்களை மேலே உயர்த்தியபடி இருக்கும் வயது முதிர்ந்த ஜனங்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிராஸ்பி என்ன கூறினார்கள்-? எனது சகோதரனே, உன்னை ஆசீர்வதிப்பாராக. நீரே என்னுடைய ஆறுதல் எல்லாவற்றிற்குமான ஓடை, எனக்கு ஜீவனைப் பார்க்கிலும் மேலானவர். எனக்கு யாருண்டு? (நான் இந்தப் பீடத்திற்காக, அதை சற்றுநேரம் மாற்றலாமா?) பூலோகத்தில் என்னைத் திருப்திபடுத்த, உம்மைத்தவிர எனக்கு என்னவுண்டு? இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறு எதுவுமில்லை. சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரியே. தேவன் உன்னைக் காண்கிறார். நீ உன்னுடைய கரத்தை மேலே உயர்த்தும்போது, நான் சென்ற மாலையில் கூறினபடி, நீங்கள் ஒவ்வொரு - ஒவ்வொரு ஈர்ப்பு விசையின் பிரமாணத்தையும் தகர்த்துப்போடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 34. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தும் போது, ஈர்ப்புவிசையின் விதிகளை எதிர்த்து நிற்கிறீர்கள். ஏன்? நீங்கள் உங்களுக்குள் ஒரு ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள். அந்த ஆவியானது கிறிஸ்துவை சேவித்து ஜீவிக்க விரும்புகிறது என்ற ஒரு தீர்மானத்தைச் செய்திருக்கிறது. உங்கள் ஆவியானது மரிக்க விரும்புவதில்லை. எனவே... ஈர்ப்புவிசையின் விதிகளை எதிர்த்து நிற்கும்படிக்கு, அது உங்கள் கரங்களை கீழே தான் பிடித்து வைத்திருக்கும், உங்களுடைய - ஐச் செய்கிற, உங்களுடைய கரங்களை உங்கள் சிருஷ்டிகரை நோக்கி உயர்த்தும்படியான, இயற்கைக்கு மேம்பட்ட ஏதோவொன்று அங்கே உங்களுக்குள்ளிருக்கிறது. தேவன் அதைக் காண்கிறார். நீங்கள் அதைக் குறித்துக் காட்டுவீர்களானால் (mean), அவர் உங்கள் பெயரை ஜீவபுஸ்தகத்தில் வைக்கிறார், "நீங்கள் நித்திய (Eternal), நித்திய ஜீவனை (Everlasting Life) உடையவர்களாயிருந்து, ஒரு போதும் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டு இருக்கிறீர்கள்." பரிசுத்த யோவான் 5:24, தேவனுடைய வார்த்தை. நாம் ஜெபிப்பதற்கு சற்று முன்பாக வேறொருவர் உண்டா-? "சகோதரன் பிரன்ஹாமே, என்னை நினைவுகூரும்." அங்கே பின்னாலுள்ள சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மிகவும் பின்னால் நான் உன்னுடைய கரங்களைக் காண்கிறேன். நிச்சயமாக, தேவன் காண்கிறார். இங்கேயுள்ள சகோதரியே, உன்னையும், சகோதரியே உன்னையும், பையனே உன்னையும், சகோதரியே உன்னையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அங்கேயுள்ள சகோதரனே, உன்னையும், சகோதரியே உன்னையும், உன்னையும் தேவன் ஆசீர்வதிப்பாராக, ஓ, அது அற்புதமானது. இன்றிரவு இந்தச் சிறு கூட்டத்தாரில் ஏற்கனவே 40, 50 கரங்கள் மேலே (உயர்த்தப்பட்டு விட்டன. 35. "கிறிஸ்துவுக்கு என்னுடைய விசுவாச வாக்குறுதியைச் செய்ய இப்பொழுது விரும்புகிறேன். நான் என்னுடைய கரங்களை மேலே உயர்த்துகையில், நீரே என்னுடைய நித்திய பங்காய் இருக்கிறீர் என்று இப்பொழுது வாக்களிக்கிறேன்." உலகத்திலேயே மிகப்பெரிய வெகுமதியாகிய, தேவனுடைய நித்திய ஜீவன் என்ற வெகுமதி, உங்கள் இருதயத்திற்குள், "ஆமாம், என்னுடைய பிள்ளை, நான் இப்பொழுது உன்னை ஏற்றுக் கொள்கிறேன்" என்று திருப்பிப் பேசும். இங்கே போர்வீரர் அணிகளிலுள்ள (reserves), சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே இருக்கும் சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, நிச்சயமாகவே அவர் உங்களைக் காண்கிறார். எனது சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்கேயிருக்கிற உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. "நீரே, என்னுடைய நித்திய பங்காயிருக்கிறீர்..." ஜெபத்திற்கு சற்று முன்பாக, நீங்கள் மறுபடியும் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னாலிருக்கும் நீங்கள், ஆமாம். உங்கள் கரத்தை இன்னும் உயர்த்தி, கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்பாத மற்ற சிலர், நீங்கள் சரியாக இப்பொழுதே அதைச் செய்வீர்களா-? சிறு பையனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சரி. 36. சற்று நேரம் கூட. நம்முடைய நேரம் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறிவேன். ஒருக்கால் இதற்கு முன்பு ஒரு கூட்டத்திலும் ஒரு போதும் இருந்திராத எத்தனை பேர் இங்கே உள்ளேயிருந்து, "சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, இந்த ஒரு அடிப்படையின் பேரில் நான் இன்றிரவு வந்திருக்கிறேன். நான் சோபாவின் இராஜஸ்திரீயைப் போன்று வந்திருக்கிறேன். நான் வந்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக அவர் செய்த அதே காரியத்தை இங்கே காடில் கூடாரத்திலும் செய்து கொண்டிருக்கிற இந்தக் கிறிஸ்துவைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று கூறுவீர்களா? "கவனிக்கும்படியாக நான் சேபாவின் இராணியைப் போன்று வந்திருக்கையில், இன்றிரவு கிறிஸ்து அதைச் செய்வாரானால், நானும் கூட என்னுடைய இருதயத்தை ஒப்புவிப்பேன். ஓ, சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒரு சபை அங்கத்தினனாக இருந்து வருகிறேன், ஆனால் நான் ஒருபோதும் மறுபடியும் பிறந்ததில்லை. நான் இன்னும் உலகத்தின் காரியங்களை நேசிக்கிறேன்." ஓ, நீங்கள், "நீர்... அதை நேசிப்பதை நீர் விட்டுவிடும்படி செய்யும் ஏதாகிலும் அங்கே இருக்கிறதா-?" என்று கேட்கலாம். இயேசு சொன்னார், அல்லது வேதாகமம், "உலகத்தையோ அல்லது உலகக் காரியங்களையோ நேசிக்கிறவனிடத்தில், தேவனுடைய அன்பு ஏற்கனவே இல்லை" என்று கூறுகிறது. 37. அசுத்தத்தையும், நவீன உலகத்தின் உல்லாசத்தையும் நேசித்து விட்டு, இன்னுமாக கிறிஸ்துவையும் நேசிக்க உங்களால் முடியாது. அது முற்றிலும் கூடாத காரியமாகும். கசப்பான தண்ணீரும் தித்திப்பான தண்ணீரும் ஒரே நீரூற்றிலிருந்து வர முடியாது. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி, "இன்றிரவு தேவன் அதை எனக்கு நிரூபித்துக் காட்டுவாரானால், நான் அவருடைய அன்புக்குரிய ஊழியக்காரனாக இருப்பேன், எனவே நான் ஜீவிக்கும் காலம் வரையில் எனக்கு உதவி செய்யும்" என்று கூறுவீர்களா-? அந்த விதமாக உணரும் சபை அங்கத்தினர்கள் எல்லாரும், அல்லது பாவிகளும், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர்களில் டஜன் கணக்கானவர்கள். சரி, நாம் ஜெபிப்போம். 38. ஓ, பங்காகிய நீர், அற்புதமான கிறிஸ்துவாகிய நீர், வாரும், ஓ கிறிஸ்துவே இவர்களை ஏற்றுக் கொள்ளும். இன்றிரவு இச்செய்தியின் கனிகளினாலே, தேவனை அவர்களுடைய இருதயத்திற்குள் கொண்டு வந்திருக்கிறீர். நீர், "என் பிதாவானவர் முதலாவது எவனையும் இழுத்துக் கொள்ளாவிட்டால், அவனால் என்னிடம் வர முடியாது" என்று கூறியிருக்கிறீர். தேவன் தமது குமாரனுக்கு அருளியிருக்கிற அன்பின் வெகுமதிகளாக இவர்கள் இருக்கிறார்கள். நீர், "இவர்களை எனக்குக் கொடுத்த என் பிதாவைப்போல பெரியவர் எவருமில்லையாதலால், ஒருவனும் இவர்களை என்னுடைய கரத்திலிருந்து பறித்துக்கொள்ள முடியாது" என்றீர். மிகவும் பரிசுத்தமுள்ள தேவனே, நான் இவர்களை உம்மிடம் கொடுக்கிறேன். இவர்கள் மறுபடியும் ஒரு போதும் வழியை விட்டு விலகி நடக்க விரும்பாதிருக்கும்படி, நீர் இவர்களுடைய இருதயத்தை பூரண சமாதானத்தில் காத்துக் கொண்டு, இவர்களுடைய ஆத்துமாவில் இருக்கிற ஒவ்வொரு ஏக்கங்களையும் திருப்தி செய்து, கிறிஸ்துவை இவர்களுக்கு மிகவும் உண்மை உள்ளவராக்க வேண்டுமென்று எனக்கு உள்ளிருக்கிற அவை எல்லாவற்றைக் கொண்டும் உத்தமமாக ஜெபிக்கிறேன். இவர்கள் உம்முடையவர்கள், பிதாவே. கர்த்தராகிய இயேசு என்ற உமது குமாரனுடைய நாமத்தில், நான் இவர்களை உம்மிடம் கொடுக்கிறேன். ஆமென். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்) ...?... பழைய கீர்த்தனைப் பாடல்களை, நீங்கள் அப்படியே அவைகளை நேசிக்கிறீர்களா? ஓ, மிகவும் உண்மையாக இருக்கும்படியாக, அவைகளைக் குறித்து அங்கே ஏதோவொன்றுள்ளது. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முதலில் அவர் என்னை நேசித்த காரணத்தால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை இருண்ட கல்வாரியில், தனியாக (cold)." இன்றிரவு இங்கே உள்ளேயிருக்கும் ஒவ்வொரு விசுவாசியும், தேவனை நேசிக்கிற எல்லாரும், நாம் இதைப் பாடுகையில், நம்முடைய கரங்களை உயர்த்துவோம். இப்பொழுது எல்லாரும் முன்னால் வாருங்கள். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முதலில் அவர் என்னை நேசித்த காரணத்தால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில்… 39. அது அப்படியே உங்களுக்கு ஏதோவொன்றைச் செய்வதில்லையா-? அது அப்படியே உங்களுக்கு ஒரு திருப்தியளிக்கும் பங்கைக் கொடுப்பதில்லையா-? எத்தனை பேர் அதைக் குறித்து அந்தவிதமாக உணருகிறீர்கள்-? "அது அப்படியே எனக்கு ஏதோவொன்றைச் செய்கிறது” என்று கூறுங்கள். அது என்ன-? இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது சகல பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறது. நாம் நம்முடைய சொந்த தகுதிகளில் நம்பிக்கை வைக்க முடியாது; நாம் அவருடைய தகுதிகளில் மாத்திரமே நம்பிக்கை வைக்கிறோம், மேலும் நாம் கிறிஸ்துவுக்குள் இருந்து... கிறிஸ்துவின் சரீரமானது ஏற்கனவே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு விட்டது. நாம் ஒரு போதும் நியாயத்தீர்ப்புக்குட்பட முடியாது, ஏனென்றால் நாம் கிறிஸ்துவை நம்முடைய கிருபாதார பலியாக (Propitiation) ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆகையால், நாம் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட முடியாது. தேவன் நீதியுள்ளவராக இருந்து, நம்மை நியாயத் தீர்ப்புக்குக் கொண்டுவர முடியாது. நாம் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டு விட்டோம். நமக்குப் பதிலாக அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டார். அந்தச் செய்தியானது ஊடுருவிச் செல்ல மாத்திரம் முடியுமானால், அது உலகத்திலேயே மிகக் கொடிய இதயமுள்ள பாவியின் இருதயத்தையும் செய்யும். இப்பொழுது, நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். நாம் அப்படியே எவ்வளவு திருப்திகரமாகப் புறப்பட்டு போகப் போகிறோம் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அதெல்லாமே தேவனுடைய கரங்களில் தான் இருக்கிறது (lays). ஆனால் நீங்கள் அப்படியே சற்று நேரம் எனக்கு உங்கள் சிதறாத கவனத்தைத் தர விரும்புகிறேன். என்னால் எத்தனை அதிகமானோருக்கு ஜெபிக்க முடியுமோ அத்தனை பேருக்கு நான் ஜெபிப்பேன். அப்போது நாம் அப்படியே சற்று வேகமாக அவர்களுக்காக ஜெபிக்கத் தொடங்குவோம். 40. இந்தக் கூட்டமானது முடிவு பெற்றுக் கொண்டிருக்கும் போது, நாம் இங்கே நின்று கொண்டிருக்கையில், நான் இன்றிரவு வியப்படைகிறேன், இந்த மகத்தான பட்டணத்திற்கு வந்து, அவர்களுடைய கூடாரத்தில் இருக்கவும், இங்கே அவர்களுடைய விருந்தினராக இருக்கவும், நாம் -அவர்கள் நமக்குக் கொடுத்திருக்கும் சிலாக்கியத்திற்காக, நான் புஃபோர்ட் கேடில் அவர்களுக்கும், கேடில் கூடாரத்தின் ஊழியர்களுக்கும் (staff) என்னுடைய இருதயத்தின் ஆழங்களிலிருந்து நன்றி செலுத்த விரும்புகிறேன். தேவன் தாமே மனந்திரும்பின ஆத்துமாக்களைக் ('pented souls) கொண்டு இந்தக் கூடாரத்தை நிரப்புவாராக என்பதே என்னுடைய உத்தமமான ஜெபமாயுள்ளது. இங்கேயுள்ள அன்புக்குரிய மேய்ப்பர், இந்நேரத்தில், அவருடைய பெயரை என்னால் ஞாபகப் படுத்த முடியவில்லை. நான் ரேடியோவில் அவர் பேசுவதை) பலதடவை கேட்டிருக்கிறேன், அவர் ஒரு அற்புதமான வேதாகமப் போதகராகவும், ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரனாகவும் இருக்கிறார். திருமதி.கேடில், காலஞ்சென்ற திருமதி.கேடில் அவர்களோடு பாடின ரஸ்ஸல் ஃபோர்டு அவர்களை எல்லாருக்கும் தெரியும், இனிமையான குரல். அவரையும் கூட தேவன் ஆசீர்வதிப்பாராக. இந்தக் கூடாரத்தோடு தொடர்புடைய எல்லாருக்கும், அவர்களுக்காக நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தர் தாமே அவர்களை ஆசீர்வதிப்பாராக. (ஒரு சகோதரர், "அது சங்கை. ரெனால்ட்ஸ்" என்று கூறுகிறார் - ஆசிரியர்) சங்கை. ரெனால்ட்ஸ், அது முனைவர் சங்கை. ரெனால்ட்ஸ் அவர்கள் என்று நம்புகிறேன். நாம்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 41. அது பிராயச்சித்தத்தில் இருக்குமானால், அது ஒரு செய்து முடிக்கப்பட்ட கிரியையாக இருக்கிறது. கிறிஸ்து மரித்த போதே, இரட்சிப்பு செய்து முடிக்கப்பட்டு விட்டது. கிறிஸ்து கல்வாரியில் மரித்த போதே, ஒவ்வொரு மீட்பின் ஆசீர்வாதங்களும் செய்து முடிக்கப்பட்டு விட்டது. நாம் செய்கிற ஒரே வழி என்னவென்றால், அது கிறிஸ்து மூலமாக தேவனிடமிருந்து வருகிற நம்முடைய தனிப்பட்ட வெகுமதியாக ஏற்றுக் கொள்வது தான். முதலாவது, அது வார்த்தையைக் கேட்பதன் மூலமாக வருகிறது. அடுத்ததாக, அது போதகர்களின் மூலமாகவும், அப்போஸ்தலர்கள் மூலமாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாகவும் வருகிறது, மேலும் சபையிலுள்ள வித்தியாசமான வரங்கள். இப்பொழுது, இயேசு இவைகளைச் செய்ய வேண்டியதில்லை. அது நன்கு அறியப்படட்டும். எனக்கு 48 வயதாகிறது. இங்கே பூமியின் மேல் எனக்கு எவ்வளவு காலம் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ (lotted) எனக்குத் தெரியாது. ஆனால் தேவனானவர், வெறுமனே தாம் தேவனென்று நிரூபிக்கும் படியாக இவைகளைச் செய்ய வேண்டியதில்லை என்ற இது அறியப்படுவதாக, ஆனால் அவர் இவைகளைச் செய்வார் என்று தாம் வாக்குத்தத்தம் பண்ணின காரணத்தினால், அவர் இவைகளைச் செய்கிறார். இயேசு, "தீர்க்கதரிசி உரைத்தது நிறைவேறும்படி அவர் அதைச் செய்தார்" என்று கூறினார். 42. இயேசு, "நான் செய்கிற இதே காரியங்களை நீங்கள் செய்வீர்கள். நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட இருப்பேன்" என்று கூறியிருக்கிற காரணத்தினால், தேவன் இதை இன்றிரவு செய்கிறார். அவர் நிச்சயமாக அந்த வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். பிற்பாடு, அவருடைய உயிர்த்து எழுதலுக்குப் பிறகு, கிலெயோப்பாவும் அவனுடைய சிநேகிதனும் கீழே எம்மாவூரை நோக்கிப் போய்க் கொண்டு இருப்பதை நாம் கண்டோம். அவர்கள் ஒரு மனிதரோடு நாள் முழுவதும் நடந்து சென்றும், அது இயேசு தான் என்று அறிந்து கொள்ளவில்லை. இன்றிரவு இங்கேயிருக்கும் அநேக அன்பான ஜனங்கள் ஒவ்வொரு நாளும் நடந்து செல்கிறார்கள். ஒருக்கால் இதற்கு முன்பு நீங்கள் ஒருபோதும் ஒரு கிறிஸ்தவனாயில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த விபத்து நடப்பதிலிருந்து உங்களைக் காத்துக்கொண்டவர் கிறிஸ்து தான். அந்தக் குழந்தையின் ஜீவனைக் காப்பாற்றினவர் கிறிஸ்து தான். நீங்கள் அதை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. 43. ஆனால் அவர் அவர்களை உள்ளே பெற்றவராய், அந்தச் சிறு சத்திரத்திலுள்ள கதவுகளை அடைத்த போது, அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக இங்கிருந்த போது, அவர் செய்ததைப் போன்று அப்படியே ஏதோவொன்றைச் செய்தார். அப்போது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது, அது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாகத் தான் இருக்க வேண்டுமென்று அவர்கள் அதை அடையாளம் கண்டு கொண்டார்கள். அவர்கள் வேகமாகவும், சந்தோஷமாகவும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள், அவர்களுடைய மார்க்கத்தைக் குறித்து தர்க்கம் செய்வதற்கு அல்ல, ஆனால், "மெய்யாகவே, ஆண்டவர் உயிர்த்தெழுந்தார்" என்று கூறுவதற்குத் தான். 44. அதற்காகத் தான் நாம் இங்கேயிருக்கிறோம்: தேவனுடைய அந்த வரத்தின் மூலமாக, தேவனுடைய சித்தத்தினாலே வெளிப்படுத்துவதற்குத் தான், அந்த உயிர்த்தெழுந்த இயேசு. அவர் இன்றிரவு இந்த மேடையில் வந்து, கவனித்துக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தினரூடாக, அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக, இங்கே பூமியின் மேல் செய்தது போலவே, அப்படியே, அதைப் போன்றவைகளைச் செய்வாரானால்..... வேதாகமம், எபிரெயர் 13:8ல், "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று கூறுகிறது. இப்பொழுது, நேற்றைய இயேசு, தாம் ஒரு சுகமளிப்பவராக இருப்பதாக உரிமை கோரினாரா-? இல்லை , ஐயா. அவர், "இந்தக் கிரியைகளைச் செய்வது நானல்ல; எனக்குள் வாசம் செய்கிற என்னுடைய பிதாவானவரே செய்கிறார். அவரே இந்தக் கிரியைகளைச் செய்கிறார்" என்று கூறினார். இப்பொழுது, பரிசுத்த யோவான் 5:19-ஐக் கவனியுங்கள். அவர் ஒரு கூட்டம் ஊனமுற்றவர்களைக் கடந்து போய்விட்டார். அவர்களில் எவரையும் அவர் குணப்படுத்தவில்லை. ஒரு சிறு படுக்கையின் மேல் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனிடம் அவர் சென்று, "நீ சுகமடைய விரும்புகிறாயா-?" என்று கேட்டார். அவன் அந்நிலையில் இருப்பதை இயேசு அறிந்திருந்தார். அந்த மனிதன் பிடிக்கப்பட்ட போது, அவன் சுகமடைந்த பிறகு, அவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. 45. இயேசு, "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய அவரால் முடியாது, குமாரனும் அந்தப்படியே செய்கிறார்" என்று கூறினார். நான் - அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். இன்றிரவும் அதே காரியத்தைச் செய்வார். இப்பொழுது, என்னுடைய மகன்... (அவைகளை விநியோகித்திருக்கிறான். நீங்கள் என்ன ஜெப அட்டைகளை வைத்திருக்கிறீர்கள்...? Q-கள், 1 முதல் 100 வரையா-? *******